தமிழருக்கு தீர்வென்றால் இந்திய நலனுக்கு ஆதரவு: வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி
சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா, தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுத் தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழருக்குத் தீர்வல்ல எனவும், ஒற்றையாட்சியை தாண்டி தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர வேணடும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று (09.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
13ஆம் திருத்தச் சட்டம்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அதனை ஒட்டி தமிழ் மக்களுடைய 75 ஆண்டுகால இனப் பிரச்சினைக்கு தீர்வு விடயத்திலே இந்தியா ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கடிதம் ஒன்று யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பொறுப்பதிகாரிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.
அதனுடைய பிரதி, மின்னஞ்சல் ஊடாக யாழில் உள்ள துணை தூதுவருக்கு அனுப்பப்பட்டு அதனை இந்திய பிரதமருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்ட மின்னஞ்சல் கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுப்பப்படவுள்ள மூலப்பிரதியில் உள்ள சாராம்சங்கள் 75 வருட காலம் புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு தீர்வும் பொருத்தப்பாடு உடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதனை சுட்டிக்காட்டி ஒற்றை ஆட்சியைக் கடந்து தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதான ஒரு தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கடிதம் அமைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
