இலங்கை நோக்கி நகர்ந்துள்ள நரேந்திர மோடியின் அழுத்தம்! ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தகவல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம் விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
BJP’s cronyism has now crossed Palk Strait and moved into Sri Lanka. pic.twitter.com/Uy2w6szHNP
— Rahul Gandhi (@RahulGandhi) June 12, 2022
ஜனாதிபதி மற்றுப்பு
எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக, ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்தார் என்று இலங்கை மின்சார சபைத் தலைவர் இலங்கையின் நாடாளுமன்ற கோப் குழுவிடம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, இந்தியாவின் அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார்.