நப்கின்ஸ் வரியை குறையுங்கள்! அரசிடம் கோரிக்கை
நப்கின்ஸ் வரியை குறைக்க வேண்டும் என விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆவணப்படுத்தும் உத்தியோகத்தர் கே. சிவஜோதி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாதவிடாய் தினத்தையொட்டி “மாண்புடன் கூடிய மாதவிடாய்” எனும் தொனிப்பொருளில் விழுது மேம்பாட்டு ஆற்றல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊடக சந்திப்பு இடம்பெற்ற போதே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாட்டில் 30 வீதமான பெண்கள் மாத்திரமே மாதவிடாயின் போது நப்கின்ஸ்களை பயன்படுத்துவதாகவும் நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் நப்கின்ஸ்களை 15 வீதமான வரியினை அதிகரித்துள்ளமையினால் பெண்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பல தொற்று நோய்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் மாதவிடாயை பிற்போடும் மாத்திரைகளை பயன்படுத்தி வருவதனால் குடும்ப பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாவதாக இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாடசாலைகளில் சமத்துவ ரீதியான பாலின கல்வி கற்றலை மேம்படுத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 15 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri