நானுஓயாவில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் : அறுவருக்கு விளக்கமறியல்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் கடந்த 14ஆம் திகதி இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சிகிச்சைப் பலனின்றி ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் பழைய பகை ஒன்றின் காரணமாக பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம் முற்றியதில் தனியாக அழைத்துச் சென்று சிலரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
குடும்ப தகராறே கொலையில் முடிவு..
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் குடும்ப தகராறே கொலையில் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேரையும் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அனைவரையும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam