கோட்டாபயவின் பதவி விலகலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை! பரிந்துரைக்கப்படும் புதிய பிரதமரின் பெயர்: ஹர்ச டி சில்வா தகவல்
புதிய பிரதமர் ஒருவரின் பெயரை பரிந்துரை செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் இணைந்து இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
Responding to request by PM @RW_UNP to @ParliamentLK Speaker to propose a name by consensus for PM, opposition parties will today discuss with various parties and groups in government to get such consensus. We will propose this name to Speaker at 10am tomorrow. #SriLankaCrisis
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 14, 2022
அத்துடன் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை சபாநாயகர் காத்திருக்காது உடனடியாக ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் அதற்கான அறிவிப்பை உடனடியாக சபாநாயகர் வெளியிட வேண்டும் எனவும் ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமைக்குள் இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்றும், அடுத்த புதன்கிழமை வரை காத்திருப்பது மிகவும் காலதாமதம் ஆகலாம் எனவும் அவர் நேற்று பதிவிட்ட ட்டுவிட்டர் பதிவொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
If @GotabayaR has resigned, Speaker of @ParliamentLK need not wait till the 15th to make the announcement. He can make it immediately and call for nominations and we can elect new President of #SriLanka by Sunday. Waiting till next Wednesday might be way too late. #SriLankaCrisis
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 13, 2022

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
