குரங்குகளை கணக்கிடுவதற்கு நாமல் வாழ்த்து
எதிர்வரும் 15 ஆம் திகதி, குரங்குகளை சரியாக கணக்கிடுங்கள். நாங்கள் கணக்கிடுபவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விவசாய நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விவசாயிகளுக்கான போராட்டம்
“எங்கள் தோட்டத்தில் உள்ள குரங்குகளை எண்ணி ஒரு பட்டியலை அனுப்புகின்றோம்.
மேலும், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்காகப் போராடிய போராட்டத்தை தற்போதும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
விவசாயத்தில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் சில பின்னடைவு ஏற்பட்டுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இப்போது உங்களுக்கு அவ்வாறு செய்ய வாய்ப்பு உள்ளது.
அது விவசாயிகளுக்கு பாதகம் என்றால், அவர்களை தூண்டிவிட்டு வீதிகளில் இறங்க ஊக்குவிக்க மாட்டோம்.
எனவே, விவசாயத்தில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கவும்," என்று நாமல் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |