நாமலை சிறையில் அடைத்து வீழ்த்த முடியாது
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை பார்வையிட சென்ற போது ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் மரணிப்பதற்கும் சிறையில் செல்வதற்கு அடைபடுவதற்கு அஞ்சாதவர்களினால் மட்டுமே ஆபத்துக்களை எதிர்நோக்கி முன்னோக்கி செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக அவ்வாறு தைரியமானவர்கள் அரசியலில் வெகு சிலரே உள்ளதாகவும் அவ்வாறான தைரியமான ஒருவரே நாமல் ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பதே தென்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவை பொய்யான ஓர் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைப்பதற்கான முயற்சி மூலம் ஜனாதிபதிக்கு இந்த விடயம் புரியவில்லை என்பது புலனாகின்றது என உதய கமன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.