உலக பதற்றம் குறித்து அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நாமல் ராஜபக்ச
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான அதிகரித்து வரும் உலகளாவிய பதற்ற நிலையை முன்னிட்டு, அரசு விழிப்புடன் மற்றும் தயார்நிலையுடன் இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் “X” சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகாலப் போரின் தாக்கத்தை அனுபவித்த நாடாக இலங்கை மோதலின் பாரிய செலவை நன்கு புரிந்துகொள்கிறது என அவர் குறிப்பிட்டார்.
எந்த வடிவிலான வன்முறையையும் கடுமையாக கண்டித்த அவர், இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரிய சக்திகளுக்கிடையிலான மோதல்களின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது என எச்சரித்தார்.
அத்தியாவசிய சேவை
உலக வர்த்தகம், எரிசக்தி விநியோகம் மற்றும் வழங்கல் சங்கிலிகளில் ஏற்படும் தடைகள், இலங்கையின் வாழ்வாதாரம், சந்தைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால், அரசு முன்கூட்டியே அபாயங்களை கணித்து, மாற்றுத் திட்டங்களை வலுப்படுத்தி, பாதிக்கப்படக்கூடிய துறைகள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பதற்றம் நிலவும் பகுதிகளில் வசித்து வரும் இலங்கையர்களின் பாதுகாப்பு மிக முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டு மோதல்
இலங்கை தனது உள்நாட்டு மோதலின் இறுதி கட்டங்களிலும் உரையாடல் மற்றும் தூதரக அணுகுமுறையை முன்னெடுத்தது என்பதை நினைவுபடுத்திய அவர், நிலையான சமாதானத்திற்கு உரையாடலே வழி என குறிப்பிட்டார்.

உலக சமூகம் சிக்கல்களுக்கு தேர்ந்தெடுத்த முறையில் பதிலளிக்கக் கூடாது என்றும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam