வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும்: நாமல் எச்சரிக்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் கலாசாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப என்.பி.பி. அரசு தொடர்ந்து செயற்படுமானால் வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான பயணம்
அவர் மேலும் தெரிவிக்கையில், பாடப் புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள் பற்றி இந்த அரசு எப்படி புரிந்து கொள்ளும்?
கலாசாரம், ஆன்மீக பண்பாடு இன்றி நாடு ஏனோ, தானோ என்று சில மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயணிப்பது ஆபத்தானது.

ஏனெனில் நாடொன்றுக்கு (வெனிசுலா) வந்து விமானத்தில் ஜனாதிபதியைக் கொண்டு சென்றது போன்று எமது நாட்டிலும் நடக்கக்கூடும். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறப்பட்டாலும் ஆளுங்கட்சியினருக்கு வேறுபட்ட விதத்தில் செயற்படும் நிலையே காணப்படுகின்றது.
அதேவேளை, பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். கல்விக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு தொடர்பிலேயே அவர் பதவி விலக வேண்டும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam