பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு குறித்து மக்கள் கேள்வி: நாமல் சுட்டிக்காட்டு
நாட்டில் பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக் குழுவில் முன்னிலையான போது அவர் இந்த விடயங்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமது தலைவிதியை ஆளும் கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
நீதிமன்றம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை விடவும் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குகள் தொடர்பான மற்றும் விசாரணைகள் தொடர்பான தகவல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக சாட்சிகள் புனையப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மை கைது செய்தாலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் நடத்தப்படும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விவசாயிகளுக்காக களம் இறங்கி போராடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் எந்தவிதமான குற்றத்தையும் இழைக்கவில்லை எனவும் அதனால் சுயாதீனமான விசாரணைகளுக்கு முகம் கொடுக்க எந்த நேரத்திலும் அஞ்ச போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening