அநுர அரசுக்கு எதிராக நாமலின் புதிய வியூகம் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“புதிய அலை” என்ற பெயரில் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல்
அத்துடன், டி.வி. சானக்க, சானக்க மாதுகொட, அனுராத ஜயரத்ன மற்றும் ரோகித அபேகுணவர்தன உள்ளிட்ட நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் இதில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்களை ஒன்றிணைத்து பரந்ததொரு முன்னணியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அதற்கமைய, பிரதேச மட்டத்தில் உள்ள துடிப்பான இளம் தலைவர்களை முன்னிலைக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டு எதிர்க்கட்சி
கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டங்களில் முன்னிலை வகித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அனுராத ஜயரத்ன உள்ளிட்ட சிலர் அதன் செயற்பாடுகளிலிருந்து விலகவுள்ளனர்.

அதில் இருந்து விலகி, இந்தப் புதிய குழுவுடன் இணையவுள்ளதாகவும், திலும் அமுனுகம உள்ளிட்ட சிலரும் எதிர்காலத்தில் இக்குழுவுடன் இணையவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்