ரணிலின் கைது தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள தகவல்
அன்று கையில் எடுத்த ஜேவிபி அரசாங்கத்தின், இன்று அதிகாரத்தையும் அவ்வாறே பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த விடயம் எம்மை சங்கடப்படுத்துவதை விட அரசாங்கத்தின் நிர்வாகம் தொடர்பில் கவலையை ஏற்படுத்துகின்றது.
அரசியல் பிரசாரம்
மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது.
எனினும், அரசியல் பிரசாரத்திற்காக அதனை செய்வது பெரும் தவறு ஆகும்.
இந்த விடயம் தொடர்பில் நாம் அரசியல்வாதிகளாக சிந்தித்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
