நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை ஒன்றையும் முன் வைத்துள்ளார்.
நாடாளுமன்ற ஒத்தி வைத்துவிட்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இன்றைய தினம் இந்த கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

அனர்த்த நிலைமைகளின் போது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வசதிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆபத்தான பகுதிகள் பல காணப்படுவதாகவும் உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இந்த மலை வெள்ளம் விவசாய நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.