போலிப் பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக வழக்கு தொடர்வதாக நாமல் எச்சரிக்கை
மின்சார கட்டண நிலுவை தொடர்பில் போலி பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தாம் இலங்கை மின்சார சபைக்கு பாரிய தொகையில் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக சிலர் போலி பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலி பிரச்சாரம்

இவ்வாறு போலி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் தாம் அறிவித்துள்ளதாகவும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் இலங்கை மின்சார சபை தமக்கு எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வின் போதான மின்சாரக் கட்டண நிலுவை செலுத்தப்படவில்லை என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam