விடுதலைப் புலிகளின் பேச்சைத் தொடங்கும் ராஜபக்சர்கள்! செய்திகளின் தொகுப்பு
ராஜபக்சர்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலில் நின்று மக்களின் வாக்குமூலம் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், போராட்டத்தின் மூலம் நாட்டை அராஜகம் செய்வதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான்.
முழு உலகமும் கொவிட் தொற்றினால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி அந்த சவாலில் இருந்து மீள முயற்சிக்கும் வேளையில், சிலர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து எடுக்க முடியாத அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
