வரலாற்றுப் பொன்னான தருணத்தை தவறாகக் காட்ட முயற்சி: நாமல் சுட்டிக்காட்டும் விடயம்
போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட ஆண்டுகளாகத் தொடர்ந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டிய அனைத்து படையினரின் தியாகத்தையும், அவர்களின் துணிவையும் இன்று நாம் மகிழ்வுடன் நினைவுகூருகிறோம்.
இலங்கையின் மனிதாபிமானப் பணி
உலகின் மிகவும் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு மனிதாபிமானப் பணியை இலங்கை முன்னெடுத்தது.

இந்த வரலாற்றுப் பொன்னான தருணத்தை நாம் சிந்திக்கும்போது, போர் காலத்தில் சகிப்புத்தன்மையுடன் துன்பங்களை எதிர்கொண்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவது முக்கியமானதொரு கடமையாகும்.
எனினும், இந்த நிகழ்வுகளை தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam