லண்டனில் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புக்கு பின்னர் மனம் மாறிய நாமல்!
ராஜபக்சக்களின் ஆட்சியில் காணப்படாத கடைப்பிடிக்கப்படாத சித்தாந்தங்களை நாமல் வளர்த்ததுக் கொண்டுள்ளதாகவும் எதிர்கால நவீன சமூகத்துக்கு முகம் கொடுக்கக் கூடிய சிந்தனைகளை நாமல் ராஜபக்ச ஓரளவுக்கு உள்வாங்கியுள்ளதாகவும் அவர் லண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் தென்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாமல் ராஜபக்சவின் கொள்கை மாற்றம்
லண்டனில் இருந்து நாமல் வெளியிட்டிருந்த அறிக்கையில் 'மாற்றுக் கருத்தாளர்களை ஏற்றுக் கொள்வதோடு மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கான தர்க்க ரீதியிலான பதில்களை வழங்கும் விழுமியங்களுக்கு மதிப்பளிக்கிறேன்' என்ற கோட்பாடுகள் ராஜபக்சக்கள் ஆட்சியில் துளியளவும் காணப்படாத ஒன்று.
மஹிந்தவின் ஆட்சியில் மாற்றுக் கருத்துக்கள் கொண்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு வதைக்கப்பட்ட வரலாறுகள் ஏராளம். ஆனால் நாமல் சொல்லும் மாற்றுத் கருத்துக்கு தர்க்க ரீதியிலான பதிலளிக்கப்படும் என்ற சிந்தனை மாற்றம் பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆனால் இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் உரையாற்றிய பின்னர் வரும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்காமல் சென்று விடுவார்.நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எதிர் கருத்துக்களுக்கு தர்க்க ரீதியில் நாமல் பதிலளிப்பதை நாங்கள் கண்டதில்லை.

பிரித்தானியாவில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருந்ததால் அவ்வாறு சொன்னாரோ தெரியவில்லை.ஆனால் புலம்பெயர் தமிழர்களின் தர்க்க ரீயிலான கேள்விகளுக்கு நாமல் எவ்வாறு பதலளித்திருப்பார் என்பதை காண முடியாமல் போய்விட்டது.
ஆனால் நாமல் உங்களின் இந்த மாற்றம் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியலில் உங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தலாம்.