பிரபலமொன்றின் படுகொலை வழக்கு தொடர்பில் நாமல் நாடாளுமன்றில் வெளியிட்ட தகவல்
தான் சிறைச்சாலையில் இருந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த பலரை சந்தித்ததாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற காலம் தனது வயதை விடவும் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் பலர் இன்றும் சிறைகளில் உள்ளனர். வழக்கு விசாரணைகளின் பின் 35 பேரே தண்டனைப் பெற்று தொடர்ந்தும் சிறையிலிருக்கின்றதோடு அவர்கள் பெற்ற தண்டனைக் காலத்திற்கும் மேலதிகமாகவே தண்டனைக் கிடைக்கும் முன்னர் சிறையில் கழித்துவிட்டனர்.
அத்துடன் 20 வருடங்களுக்கும் மேலதிகமாக சிலர் தடுப்பில உள்ளனர். எந்த வழக்கும் தொடரப்படாத நிலையில் 13 பேர் உள்ளனர்.
வழக்கு விசாரணை நிறைவுப் பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 116 பேர் உள்ளனர். அவ்வாறு பல இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணையை முடிவுறுத்த வேண்டும். அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.
கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 12000ற்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு 3500 பேருக்கு சிவில் பாதுகாப்புப் பிரிவில் தொழில் வாய்ப்பும் பெற்றுள்ளனர்.
நான் சிறைச்சாலையில் இருந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த பலரை சந்தித்தேன்.
அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற காலம் எனது வயதை விடவும் அதிகம். இன்றுவரை அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்க முடியாமலிருக்கின்றது.
அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
சிறைச்சாலையில் நான் சந்தித்த ஒருவருடைய கதை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். குறிப்பிட்ட ஒரு பிரபலத்தின் படுகொலை வழக்கில் இவர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கைதி, செய்த குற்றம் என்னவென்றால், மரமொன்றில் கிளையை வெட்டியமையாகும். கிளையை வெட்டியவர் சிறையில், ஆனால் பிரதான குற்றவாளி வெளியே சுதந்திரமாக உள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது புனர்வாழ்வுத்திட்டத்தின் ஊடாக இவர்களுக்கு நீதியை வழங்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
இதுவொரு மன உளைச்சல் பிரச்சினையாகும். எமது அரசாங்கம் எவருக்கும் அநீதியை செய்யாது என்பதையும் குறிப்பிடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
