எதிரணிகளின் ஐக்கியமே நாட்டுக்கு இன்று முக்கியம்! நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,பிரிந்து நின்று நாட்டைப் பலவீனப்படுத்துவதை விட அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று எனது தந்தை எப்போதும் நம்பினார்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவதற்கான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
ஒத்துழைப்பு
இருப்பினும், நான் அந்த கட்சிகள் எதிலும் உறுப்பினன் அல்லன் என்பதால், இது நடக்குமா என்று என்னால் சொல்ல முடியாது." - என்றும் அவர் கூறினார்.

தேசிய நலனுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றுதான் உறுதியாக நம்புகின்றார் என்றும் நாமல் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியும் எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்தார். அத்தகைய ஒத்துழைப்புத்தான் தேசத்துக்குச் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி என்றும் அவர் மேலும் கூறினார்.
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam