நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை! நாமல் பதிலடி
வெற்றிகரமான தேர்தலை, வெற்றி மனப்பான்மையுடன் அணுகும் போது நாட்டை விட்டு வெளியேற எந்த காரணமும் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சில அரசியல்வாதிகளை விட பொதுமக்கள் புத்திசாலிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமது வாக்கை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுன, தமது தேர்தல் விஞ்ஞாபனமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
மக்களின் நலன்
அதில் தங்களால் சாதிக்க முடியாத எதையும் உள்ளடக்கவில்லை. மக்களின் நலனுக்காக வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் அரசியல் கலாசாரம் மாற வேண்டும். தேசத்திற்கு சேவை செய்யும் போது குடும்பம் மற்றும் குழந்தைகளை பற்றிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.
தாம் பயந்து பின்வாங்கும் அரசியல் சக்தியல்ல. நாட்டில் இருந்து வெளியேற நினைத்திருந்தால் எவ்வளவு காலத்துக்கு முன்னரே வெளியேறியிருக்கமுடியும்.
நாடு எவ்வாறான பேரழிவுகளை எதிர்கொண்ட போதிலும் தாம் ஒருபோதும் நாட்டில் இருந்து வெளியேறவில்லை. எனினும் ஏனைய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பலர் நாட்டை விட்டு ஓடிவிட்டனர்” என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |