நாமலின் சட்டப் பட்டம் : புகழ்பெற்ற கல்வி வலைத்தளத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அதிக விவாதம் நடந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற கல்வி வலைத்தளம் ஒன்று நாமல் ராஜபக்சவின் சட்டமாணிப் பட்டத்தை தரவரிசைப்படுத்தியுள்ளது.
அதில் நாமல் ராஜபக்ச City University of Londonஇல் பெற்ற சட்டப் பட்டப்படிப்பின் பழைய மாணவர்களது பட்டியலில் 45ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை இங்கிலாந்தின் முன்னாள பிரதமர் மார்கரெட் தாட்சர் பெற்றுள்தோடு இரண்டாம் இடத்தை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்டுள்ளார்.
சில ஆவணங்கள் வெளியாகி..
இந்த பட்டியல் சிட்டி பல்கலைக்கழத்தின் புகழ்பெற்ற பழைய மாணவர்கள் நூறு பேரின் யெர்களை உள்ளடக்கியது.

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் நாமல் ராஜபக்ச லண்டனில் City University of London பெற்ற சட்டமாணி சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் சிக்கல் உள்ளது என்றும், சட்டக் கல்லூரி அதை ஏற்கவில்லை என்றும் அமைச்சர் சில ஆவணங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த தரப்படுத்தல் விவகாரம் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam