சொத்து விவகாரத்தில் மகிந்தவை மாட்டிவிட்ட நாமல்..!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தனக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்தவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஒரு காலத்தில் 'கன்சல்டன்ட் ஃபார்ம்' (Consultant Firm) என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும், அதன் வருமானம் மற்றும் வரி கணக்குகள் அனைத்தையும் முறையாகப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடியாக, அவரது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
குறிப்பாக, கால்டன் (Carlton) இல்லம் கைமாறப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் மற்றும் அவர் தனது சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்..! அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை அம்பலப்படுத்திய சஹ்ரான் குழு உறுப்பினர்
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம் News Lankasri