சில வணிகக் குழுக்களுக்கு சாதகமாகவே அரசாங்கம் செயற்படுகின்றது! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

Namal Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government Economy of Sri Lanka
By Aanadhi May 31, 2026 11:26 AM GMT
Report

அரசியல் ரீதியாக தமக்கு நெருக்கமான ஒரு சில வணிகக் குழுக்களுக்குச் சாதகமாகவே தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து முடிவுகளை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.

குளியாப்பிட்டியவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரும் சிக்கலில் டுபாயில் பதுங்கியிருக்கும் ஆபத்தான நபர்கள்.! இரகசிய நடவடிக்கையினால் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி

பெரும் சிக்கலில் டுபாயில் பதுங்கியிருக்கும் ஆபத்தான நபர்கள்.! இரகசிய நடவடிக்கையினால் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி

அரசின் அசமந்தப்போக்கு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்களின் பக்கம் நிற்கவில்லை. நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதை விடுத்து, ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமான ஒரு சில வணிகர்களுடனேயே நிற்கிறது. அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் இறுதியில் பொதுமக்கள் சுமக்கும் சுமையாக மாறுகிறது.

சில வணிகக் குழுக்களுக்கு சாதகமாகவே அரசாங்கம் செயற்படுகின்றது! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு | Namal Rajapaksa S Allegations Government Actions

இந்த தவறான முடிவுகளின் சுமை, வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் மூலமும், உள்நாட்டுத் தொழில்துறைகள் மற்றும் வாழ்வாதாரங்களின் வீழ்ச்சி மூலமும் சாதாரண மக்கள் மீது அநியாயமாகச் சுமத்தப்பட்டுள்ளது.

மூடப்படும் தொழிற்சாலைகள்

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனது நலன்களுடன் இணைந்த ஒரு சில வணிகர்களைப் பாதுகாப்பதையே அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரும் வேளையில், ஊழியர்களைப் பாதுகாப்பது குறித்தோ, வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது குறித்தோ அரசாங்கம் மௌனம் காக்கின்றது. தொழில்துறை மற்றும் முதலீட்டிற்கு நிலையான சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, நிர்வாகம் தொடர்ந்து பொதுமக்கள் மீதான நிதிச் சுமையை அதிகரித்து வருகிறது.

சில வணிகக் குழுக்களுக்கு சாதகமாகவே அரசாங்கம் செயற்படுகின்றது! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு | Namal Rajapaksa S Allegations Government Actions

வலுசக்தி கொள்முதல் விவகாரத்தைக் கையாண்ட விதம் சமூகத்தில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தரம் குறைந்த இறக்குமதிகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்படும் நஷ்டங்கள், இறுதியில் அதிக செலவுகள் மற்றும் வரிகள் மூலம் மக்கள் மீதே சுமத்தப்படுகிறது.

விலை அதிகரிப்பு

கட்டமைப்பிற்குள் இருக்கும் தோல்விகளுக்கும் ஊழல்களுக்கும் மக்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். விவசாய சமூகத்துக்கு நிவாரணமும் பாதுகாப்பும் வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த போதிலும், உள்ளுர் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தவறிவிட்டது.

உர விலையின் கடுமையான உயர்வையும், உற்பத்திச் செலவிற்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் சந்தை வருவாய்க்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகிறது.

சில வணிகக் குழுக்களுக்கு சாதகமாகவே அரசாங்கம் செயற்படுகின்றது! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு | Namal Rajapaksa S Allegations Government Actions

முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளுர் உற்பத்திகளை ஆதரிப்பது மற்றும் இளைய தலைமுறையினருக்குத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு நடைமுறைப் பொருளாதார மீட்புத் திட்டம் இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.

அரசியல் எதிராளிகளைக் கைது செய்வதோ அல்லது விமர்சனங்களை முடக்க முயல்வதோ மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாகாது.

நாட்டிற்குத் தேவையானது தீர்வுகள், முதலீடுகள், வேலைகள் மற்றும் சாதாரண மக்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு தலைமைத்துவம் ஆகும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தினுள் அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை என்றார்.    

19 சீன கடவுச்சீட்டுகளுடன் கைதான முக்கிய அதிகாரி..! தலைமறைவாகிய இளம்பெண்

19 சீன கடவுச்சீட்டுகளுடன் கைதான முக்கிய அதிகாரி..! தலைமறைவாகிய இளம்பெண்

தையிட்டி விகாரையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!

தையிட்டி விகாரையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!


மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US