நாமலை கடும் கோபத்திற்குள்ளாக்கிய டெங்கு நோய்
கொழும்பில் டெங்கு நோய் அதிகரித்து வருவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளி ஒருவர் இருக்கும் இடத்திற்கு வந்து புகை வீசுமாறு கோரிய போது, ஒரு நோயாளி இருந்தால் போதாது, குறைந்தபட்சம் பத்து நோயாளிகளாவது இருக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பிரதேச சபை அறிவித்துள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
நெலும் மாவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடும் கோபத்தில் நாமல்
கொழும்புக்கு அருகிலுள்ள பிரதேச சபையே இவ்வாறு கூறியுள்ளது. இவர்களின் மனநிலை இந்த அளவிற்கு மோசமாக மாறியுள்ளதாக நாமல் சாடியுள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வரை காத்திருந்து புகை வீசுவதா பிரதேச சபையின் அல்லது நிறுவனத்தின் பொறுப்பா அல்லது நோய் கண்டறியப்பட்ட உடனேயே அந்தப் பகுதியிலுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் குறித்து இதைவிடவும் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.