கடவுச் சீட்டை நீதிமன்றில் கையளித்தார் நாமல் ராஜபக்ச
நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடவுச்சீட்டை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் கையளித்துள்ளனர்.
அத்துடன், சப்ரகமுவ மாகாண சபையின் தலைவர் காஞ்சன ஜயரத்னவும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சி. பி. ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரல ஆகியோரும் தமது கடவுச் சீட்டை நீதிமன்றில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 24 பேருக்கு நீதினமறம் பயணத்தடை விதித்துள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய கடவுச்சீட்டுகள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 14 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
உண்மையை சொல்லியே தீருவேன் என கிளம்பிய மீனாவிற்கு ரோஹினி வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam