நாமலுக்கு எதிரான பிடியாணை.. உடனடியாக நாடு திரும்பியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, மனுத்தாக்கல் செய்து, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு நேற்றையதினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவுக்கு பயணம்
இதேவேளை, நேற்றையதினம் அவர் மாலைதீவிற்கு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த நிலையில் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்குச் சென்ற அதே விமானத்தில் நேற்று காலை நாமல் ராஜபக்சவும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான போராட்டம் ஒன்றின் போது முறைகேடாக நடந்து கொண்டமை தொடர்பாக நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ச முன்னிலையாகாமையின் காரணமாக அவரை கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
