இராஜதந்திர பொருளாதாரப் பாலமாக அமையும் இலங்கை - நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு
ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற்றம் பெற வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சி மாநாடு அண்மையில் சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளது. சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் குழுவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், மில்கன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான கேர்டிஸ் எஸ்.சின் ஆகியோருடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிராந்தியத்தின் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பொருளாதாரப் பாலமாக மாறும் இலங்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இந்தியப் பெருங்கடலின் ஒரு தசாப்தத்துக்குள் மாத்திரம் நுழையவில்லை. மாறாக, ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடலின் நூற்றாண்டுக்குள்ளேயே நாம் கால் தடம் பதிக்கின்றோம்.

பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாகரிகங்களை ஒன்றிணைத்த பெருமை இந்த இந்தியப் பெருங்கடலுக்கு உண்டு. தற்போதைய சூழலில், அது உலகத்தின் எதிர்காலத்தை இணைக்கும் மையப்புள்ளியாக மாற வேண்டும்.
அதே போன்று ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற வேண்டும்.
இதற்கான மூலோபாயத் திட்டமிடல்களை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan