கர்தினாலை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசிய நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச,பேராயர் மல்கம் ரஞ்சித்தை நேற்று (19) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்தினார்.
சுயாதீன நீதித்துறை
இந்தநிலையில் குறித்த நோக்கத்திற்காக ஒரு சுயாதீன நீதித்துறை ஆணையத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை ராஜபக்ச ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும் சந்தித்து கலந்துரையாடினர்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது அவர் தரப்பில் எவரும் இன்று கர்தினாலை சந்திக்கவில்லை.