இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த நாமல் ராஜபக்ச
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று(25.05.2026) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்திப்பு
இதன்போது, இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த விடயங்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வுகள், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள், மற்றும் அவை வளரும் நாடுகளின் மீது செலுத்தும் தாக்கங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய - இலங்கை இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு உறவுகள், தற்போதைய கூட்டிணைப்புத் திட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இருதரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.