இந்திய உர்ஸ்தானிகரை சந்தித்த நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியாவின் உயர்தனிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பில் சந்தித்துள்ளார்.
இரு நாடுகளின் அரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த சந்திப்பு தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுடனான நீண்ட கால தொடர்புகள் மற்றும் இரு தரப்பு நட்புறவு என்பனவற்றை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சந்திப்பினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி செய்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
