முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பொன்றை நடத்திய நாமல் கருணாரத்ன
முல்லைத்தீவு – உடையார்கட்டு வடக்கு மைதானத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் துறைக்கான பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மக்கள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு, நேற்று (04.11.2025) மாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர், மேலும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களான காயத்திரிதேவி, தமிழ்வாணி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
கால்நடை வளர்ச்சி
உடையார்கட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரும் இம்மக்கள் சந்திப்பில் பங்கேற்று தங்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து அமைச்சர் அவர்களிடம் முன்வைத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகளை கவனித்து அவற்றை தீர்வு காண உறுதியளித்ததுடன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



