நாமல் கருணாரத்ன மற்றும் சமந்த வித்யாரத்ன ஆகியோர் கைது
இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஆகியோர் தனிமைச் சட்டங்களை மீறி வெலிமடை பொரலந்த பகுதியில் பசளை நெருக்கடி தொடர்பில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
நாமல் கருணாரத்ன, சமந்தா வித்யரத்ன உள்ளிட்ட 5 பேர் இன்று காலை போகாஹகும்புர போலிசில் சரணடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள் என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டவிரோத கூட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியமைக்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.