நாமலின் மோசடிகளை காட்டிக்கொடுக்கப் போகும் பிரபல தொழிலதிபர்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஒரு பிரபல தொழிலதிபர் வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கை ஒரு விமான ஒப்பந்தம் குறித்து வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த தொழிலதிபர் முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக இரண்டு முறை சாட்சியமளித்த ஒருவர் என தெரியவந்துள்ளது.
சட்ட நடவடிக்கை
அந்த நேரத்தில் குறித்த தொழிலதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அளித்த வாக்குமூலங்களை ஆராய்ந்தபோது, அவர் வாக்குமூலம் வழங்கியவர்களில் ஒருவர் தற்போதைய அரசாங்கத்தில் ஒரு அமைச்சரின் பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொழிலதிபரினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமைய நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        