கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்
கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ள நாமல் ராஜபக்ச, இலங்கை அரசாங்கம் உடனடியாக கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து, முறையாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக..
மேலும். இந்த நினைவுச்சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்து நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாது.
எனினும், இலங்கை இராணுவத்திற்கு எதிராக தவறான இனப்படுகொலை கதையை, கனடா ஊக்குவிப்பதாக, அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுக் கதையை திரித்து, சிதைக்க நீண்ட காலமாக முயன்று வரும், தமிழ் புலம்பெயர் சமூகத்தினரிடையே உள்ள சில பிரிவுகளால், கனேடிய அரசாங்கத்தின் மீது, செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும் நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கைக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான தொடர்ச்சியான முயற்சிகளைத் தடுக்கக்கூடும் என்று நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
