புதிய பிரதமருக்கு நாமல் வழங்கும் செய்தி
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
புதிய பிரதமர் நியமனம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலை காரமாக புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் உள்ளிட்டோரை தெரிவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று அவர் உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதேசமயம் இன்றைய தினம் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Congratulations to Hon. @DCRGunawardena on being appointed the new Prime Minister of #LKA. I have no doubt that together with President @RW_UNP you will be able to usher in stability & prosperity to our nation! May the noble triple gem guide u! ??
— Namal Rajapaksa (@RajapaksaNamal) July 22, 2022



