செப்டெம்பர் 12இற்கு முன் நான் சிறையில் அடைக்கப்படலாம் : நாமல் பகிரங்கம்
செப்டெம்பர் 12அன்று அனுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தால், 12ஆம் திகதிக்கு முன்பாகவே தன்னைச் சிறையில் அடைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
இன்று(01.09.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நாடு தழுவிய பேரணிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணிகளால் உருவாக்கப்பட்ட பெருகிவரும் அரசியல் உத்வேகத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5 முதல் நாடு தழுவிய பேரணிகளின் தொடரை அரசாங்கம் தொடங்க முடிவு செய்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நாமலின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கம் தனது சொந்த பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.