நாமலின் கைது ஜனநாயகத்துக்கு எதிரானது.. மொட்டுக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தமை ஜனநாயகத்துக்கு எதிரானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு. மாவட்ட அமைப்பாளர், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (06) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகிந்தவால் சுதந்திரம்..
அதில், "குறித்த கைது, இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம்.

இந்த நிலையில் நாடு அழிவு பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் 2009ஆம் ஆண்டு கிடைத்தது.
அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர் அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ச எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.