இதுவரை நடந்தவற்றிற்கு நான் மிகவும் வருந்துகின்றேன்! நாமல் ராஜபக்சவின் உருக்கமான பதிவு
அண்மைய சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வு முகப்புத்தக தளத்தில் அவர் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இந்த துயரமான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக மறைந்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன், இதுவரை நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து வருத்தமடைகிறேன். வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.