நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறப்பு
நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகோளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர்ப் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் புதிதாகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட நல்லூரான் செம்மணி வளைவு எதிர்வரும் 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மக்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாச்சாரத்தின் அடையாளங்கள் பல இவ்வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளைவு அமைக்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிதியொதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்ததோடு தனது சொந்த நிதியுதவிகளையும் வழங்கியிருந்தார்.
2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் குறித்த வளைவுக்கான அடிக்கல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாட்டி வைத்து வளைவின் கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam