நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயல்: மக்கள் விசனம் (Photos)

Sri Lanka Police Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lanka Sri Lanka Police Investigation
By Theepan Aug 22, 2022 12:40 PM GMT
Report

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நல்லூர் ஆலய சுற்று வீதியை அசுத்தப்படுத்தும் சிலருடைய பெறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் தினங்களில் ஆலயத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சம்பரம், தேர், தீர்தோற்சவம் போன்ற திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஆலயத்திற்கு அதிகளவான பக்தர்கள் வருகைதர ஆரம்பித்துள்ளனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்திக் கொள்வதற்காகவும் அதிகளவான பக்தர்கள் அதிகாலையில் ஆலயத்திற்கு வருகை தருகின்றனர்.

மக்களின் பொறுப்பற்ற செயல்

நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயல்: மக்கள் விசனம் (Photos) | Nallur Trouble Activities People During Festival

திருவிழாவிற்கு வரும் சிலர் ஆலய வீதிகளில் தாம் உண்ட உணவுகளின் மீதிகள், கச்சான் கோதுகள், காரம் சுண்டலை சாப்பிட்ட மீதி பைகள் எனவற்றை வீசி எறிகின்றனர். சிலர் அவற்றை மணல் மண்ணுக்குள் புதைத்தும் விடுகின்றனர்.

அதனால் ஆலய வீதிகள் அசுத்தமாக காணப்படுகின்றன.

ஆலய சுற்று வீதிகள் யாழ்.மாநகர சபை சுத்திகரிப்பு பணியாளர்களால் தினமும் இரவு வேளைகளில் சுத்தம் செய்யப்படுகின்றது .

அவ்வாறு சுத்தம் செய்யும் போது வீதிகளில் வீசப்பட்ட கச்சான் கோது , மிகுதி உணவுடன் வீசப்பட்ட பைகள் என்பன மணலில் புதைத்து காணப்படுவதனால் சுத்தம் செய்யும் போது சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயல்: மக்கள் விசனம் (Photos) | Nallur Trouble Activities People During Festival

ஆலயத்திற்கு வருவோர் மத்தியில் விசனம்

ஆலய வீதிகளில் பெருமளவான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள போதிலும் , அவற்றுக்குள் அவற்றை வீசாது ஆலய வீதிகளில் வீசி செல்பவர்களால் பக்தர்கள் உள்ளிட்ட ஆலயத்திற்கு வருவோர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வரும் ஒரு சில இளைஞர் குழுக்கள் அதிக சத்தம் எழுப்பும் வாகன ஒலிகளை மக்கள் மத்தியில் எழுப்பி செல்வதனால் வயதானவர்கள், குழந்தைகள் பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று கைக்குழந்தைகளுடன் சில பெண்கள் ஆலய சூழல்களில் யாசகம் பெற்று வருகின்றனர். அவர்களும் ஆலயத்திற்கு செல்வோருக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக யாசகம் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயல்: மக்கள் விசனம் (Photos) | Nallur Trouble Activities People During Festival

ஆலயத்திற்கு செல்வோர் முகங்கொடுக்கும் இடையூறுகள்

அத்துடன் ஆலய சூழலில் யாசகம் பெறும் சிலர் மது போதையில் யாசகம் பெற்று வருவதுடன் ஆலயத்திற்கு செல்வோருக்கு இடையூறுகளையும் விளைவித்து வருகின்றனர். இவ்வாறு ஆலயத்திற்கு வருவோருக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக செயற்படுவோருக்கு எதிராக பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். 

எதிர்வரும் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ள நிலையில் ஆலயத்திற்கு புலம்பெயர் நாடுகள், வெளி மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் முருகனை தரிசிக்கவுள்ள நிலையில், பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலய சூழலை சுத்தமாக பேண உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயல்: மக்கள் விசனம் (Photos) | Nallur Trouble Activities People During Festival

நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயல்: மக்கள் விசனம் (Photos) | Nallur Trouble Activities People During Festival

நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொறுப்பற்ற செயல்: மக்கள் விசனம் (Photos) | Nallur Trouble Activities People During Festival


மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US