நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lanka
By Theepan Jun 30, 2022 01:36 AM GMT
Report

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனாத் தொற்றுக் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் இம்முறை வழமைபோன்று அதாவது, 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல் இம்முறை இடம்பெறுமென யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Nallur Temple Festival 2022

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை

“ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளிவீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Nallur Temple Festival 2022

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

வாகனங்கள் வெளியேறுவதற்கான விசேட ஒழுங்குகள்

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ். நகரை அடைய முடியும்.

சுகாதார கட்டுப்பாடுகள் தீவிரம் 

ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Nallur Temple Festival 2022

சுகாதார கட்டுப்பாடுகள் இம்முறை திருவிழாவின் போது காணப்படாது. ஆனாலும் ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயற்பட வேண்டும். இவை தவிர எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம்”என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதிமுதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US