நல்லூர் திருவிழாவில் உடமைகளை தவற விட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது உடமைகளை தவறவிடப்பட்டவர்களின் பொருட்கள் மாநகர சபையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உரியவர்கள் தகுந்த அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
தவறவிடப்பட்ட உடமைகள்
பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை அட்டை, பணப்பைகள், மணிக்கூடு, தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் என்பன யாழ்ப்பாணம் மாநகர சபையின் உற்சவகாலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மாநகர சபை அலுவலகத்தில் உள்ளன.
உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
