கருவறையில் வேலாக குடிகொண்டுள்ள நல்லூரான் மயில் மீதேறி அருள்பாலிக்கும் காட்சி! 6ஆம் நாள் சிறப்பு பூஜை (Video)
தமிழர்கள் செறிந்து வாழும் யாழ். நல்லூரில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாக எழுந்தருளி நிற்கிறது நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.
இத்தனை சிறப்பு மிக்க ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆறாம் நாளான இன்று (26.08.2023) வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் மயில் மீதேறி ஆலய உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பொழிந்துள்ளார்.
கருவறையில் வேலாக குடிகொண்டுள்ள வேலாயுதனின் அருள்மழையில் நனைவதற்காக ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் இம்முறையும் அதே காட்சியை காண முடிகிறது.
அலங்காரக் கந்தனின் நாமத்தை பக்தர்கள் மெய் மறந்து உச்சரிக்க மேள தாள இசையுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது இன்றைய நாளுக்கான சிறப்பு பூஜை.
ஒவ்வொரு ஆண்டும் திரளாக பக்கதர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவானது கடந்த 2021ஆம் ஆண்டு கோவிட் தொற்று காரணமாக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தது.
கோவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கொடியேற்ற நாளில் பக்கதர்களுக்கு ஆலயத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு உற்சவ குருமார்கள், உபயகாரர்கள் உள்ளீட்ட முக்கிய பணியாளர்கள் மாத்திரமே கலந்து கொள்ளவுள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அடுத்தடுத்த பூஜைகளிலும் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளே செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கட்டப்பாடுகள் நீக்கப்பட்டு மகோற்சவ பெருவிழா நடத்தப்பட்ட போதும், இம்முறை பழைய கம்பீரத்துடன் முருகப்பெருமான் அருளாசி வழங்க இவ்வருடத்திற்கான மகோற்சவப் பெருவிழா யாழ்ப்பாணத்தையே களைகட்டச் செய்துள்ளது.
இன்றைய தினத்திற்கான சிறப்பு பூஜைகள் நேரலையாக..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        