நல்லூர் மகோற்சவகால பஜனை: சிவகுரு ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கை
நல்லூர் மகோற்சவகால பஜனை குறித்து சிவகுரு ஆதீனத்தால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
“நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஸ்தாபக ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் இடம்பெறும்.
பஜனை கொடியேற்றத் திருவிழாவில் இருந்து (21/08/2023) கொடியிறக்கத் திருவிழா வரை (14/09/2023) முருகப்பெருமான் காலையில் உள்வீதியில் வலம் வரும் பொழுதும் மாலையில் வெளிவீதி வலம் வரும்போதும் நடைபெறும்.
இந்த பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லைக் கந்தப்பெருமானின் திருவருளைப் பெற வருமாறு பாடசாலை மாணவர்களையும், அறநெறிப் பாடசாலை மாணவர்களையும், முருகப்பெருமான் அடியவர்களையும் சிவகுரு ஆதீனம் அன்புடன் அழைக்கின்றது.
பஜனையில் பங்குபற்ற விரும்புகின்ற பாடசாலைகளும் (அதிபர்/பொறுப்பாசிரியர்/ சைவசமய ஆசிரியர்/ சங்கீத ஆசிரியர்/ஆசிரியர்/அறநெறி ஆசிரியர்) ஆன்மீக சமய நிறுவனங்களும் மேலதிக விபரங்களைப் பெற விரும்புகின்ற ஆர்வலர்களும் இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் அல்லது 077 222 0103 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்”. என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |