நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் நாள் மாலை உற்சவம்(Live)
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று (22.08.2023) இரண்டாம் நாள் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன.
முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி,தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் இன்று உள்வீதியுலா வந்தமை குறிப்பிடத்தக்கது.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான மகோற்சவம்
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் நேற்று (22.08.2023) இடம்பெற்றது.
மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து, 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
துர்க்கையம்பாள் சண்டேஸ்வரியுடன் உள்வீதி ஊடாக வலம் வந்து, தங்கரதத்திலேறி
வெளிவீதியில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தாள்.













