நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வரின் மறைவிற்கு இந்துக் குருமார் அமைப்பு இரங்கல் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் பூரணரமடைந்த செய்தி சைவ மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலே இதனைக் கூறியுள்ளார்.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்தியா மதுரை ஆதீன திரு மடத்தின் தொடர்புடன் 1966ம் ஆண்டு ஆரம்பித்து சமயத்திற்காகவும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்து பல்வேறு நற்பணிகள் ஆற்றிவந்துள்ள ஆதீனமாகும்.
இரங்கல் செய்தி
முதலாவது ஆதீன கர்த்தராக மணிஐயரவர்கள் விளங்கினார்கள். நல்லை ஆதீன இரண்டாவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் விளங்கினார்கள்.
அமைதியான சுபாவமுடையவராக அனைவரையும் அன்புடன் வரவேற்று அரவணைத்து வழிகாட்டிடும் ஓர் மகா புருஷராக விளங்கினார்கள்.
இச்சமயத்தில் சைவ மக்களாகிய நாமெல்லோரும் சுவாமிகள் திருவடி பணிந்தவர்களாக சிவசாயுச்சியத்திற்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்வோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
