பரோல் கோரி தமிழக முதல்வருக்கு கடிதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் பரோலுக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிள்ளனர்.
நளினி மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய சிறைக்காவலர் ருக்குமணி பிரியதர்ஷினியிடம் 30 நாட்கள் பிணை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தில், நளினி சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் அருகில் இருந்து கவனித்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பரோல் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகி இருப்பதால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவும் தனக்கும், தனது கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பிணை வழங்க வேண்டும் என்றும் நளினி கோரியுள்ளார்.
முருகனின் தந்தை வெற்றிவேல் கடந்த வருடம் இறந்தபோது இறுதிச்சடங்கு செய்வதற்காக பிணையில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
