எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் கைதாவாரா நாமல்..! நளிந்த ஜயதிஸ்ஸ கூறும் விடயம்
எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்சவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய புராண விஹாரையில் நடைபெற்ற 'வேஹி பிரித்' வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு அச்சம்
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்சவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும்.
அத்துடன் குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது வாக்கெடுப்பு
இதேவேளை, அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டால், அதனைச் சந்திக்க அரசாங்கம் முழுமையாகத் தயாராகவே உள்ளது.
இருப்பினும், இந்த சீர்திருத்தத்திற்கு பொது வாக்கெடுப்பு அவசியமாகாது என்பதே அரசாங்கத்தின் கணிப்பு. எனினும் இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam