எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சிக்குள் இணைக்க உத்தேசம் இல்லை! நளிந்த ஜயதிஸ்ஸ எம். பி
எதிர்க்கட்சிகளின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் ஆளுங்கட்சிக்குள் இணைத்துக் கொள்ளும் உத்தேசம் அரசாங்கத்திடம் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நேற்று(26.05.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது, அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மேற்கண்டவாறு ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சி
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சில கட்சிகளின் எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், அரசாங்கத்திற்கு அத்தகைய எண்ணம் இல்லை.
மக்களிடமிருந்து தெளிவான ஆணை கிடைத்துள்ளதால், அதற்கேற்ப அரசாங்கம் செயல்படும்.

'எதிர்க்கட்சியிலிருந்து யாரையும் அரசாங்கத்திற்குள் கொண்டுவர எங்களுக்கு விருப்பமோ முயற்சியோ இல்லை.அவர்களுக்குள் எதிர்பார்ப்புகள் இருக்கலாம்.
ஆனால் எதிர்க்கட்சியிலிருந்து யாரையும் அரசாங்கத்திற்குள் கொண்டுவரும் எதிர்பார்ப்போ, தேவையோ எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 15 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam