தமது வாகனத்தில் மோதுண்டு மரணமான இளைஞர் தொடர்பில் வருத்தம் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
அண்மையில் தமது வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா (Nalin Bandara) வருத்தம் தெரிவித்துள்ளார்.
“எனது வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என, இன்று (14.06.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பொலிஸ் விசாரணைகள் நிறைவடையும் வரை அது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகள்
அத்துடன், சம்பவ நேரம் பெய்த கனமழைக்கு மத்தியிலும், தமது வாகனம் அதிவேகமாக பயணித்ததாக கூறப்பட்ட செய்தி பொய்யானது எனவும் இந்த விடயத்தில் விசாரணை நடத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு உரித்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொலிஸாரின் விசாரணைகளில் நான் தலையிடவில்லை எனவும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுடனும் தாம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
